27.5 C
Kuala Lumpur
Friday, August 7, 2026

Vetri

🔪 ஸ்தாப்பாக் சம்பவம்: மியன்மார் பெண் குத்திக்கொலை

🔥 Views : 28
👁 Reading Now : 58

ஸ்தாப்பாக் கெந்திங் கோர்ட் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில், மியன்மார் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ் உறுதிப்படுத்தினார்.

அவர் கூறுகையில்,
இன்று பிற்பகல் சுமார் 2.20 மணியளவில் பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

அங்கு,

  • பெண் ஒருவர் சுயநினைவின்றி கிடந்தார்
  • அவர் மீது கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது

என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அதே நாளில் மியன்மார் நாட்டைச் சேர்ந்த ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஆரம்பகட்ட விசாரணையில்,
👉 கைது செய்யப்பட்ட நபர், பாதிக்கப்பட்டவரின் முன்னாள் கணவர் என்பதும்
👉 பொறாமை காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles