
ரெம்பாவ் சட்டமன்றத் தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்ற தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் (மாட் ஹசான்) அவர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மக்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும், நீண்டகால அர்ப்பணிப்பான சேவைக்கும் கிடைத்த அங்கீகாரமே இந்த வெற்றியாகும்.ரெம்பாவ் தொகுதி மக்களின் நலன், மாநிலத்தின் முன்னேற்றம் மற்றும் அனைத்து இன மக்களின் ஒற்றுமை, வளர்ச்சி ஆகியவற்றிற்காக தாங்கள் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றுவீர்கள் என்ற முழு நம்பிக்கை எனக்குள்ளது.இந்த வெற்றி, நெகிரி செம்பிலானின் வளர்ச்சிக்கும், நிலையான நிர்வாகத்திற்கும் மேலும் வலுசேர்க்கும் என்று நம்புகிறேன்.தங்களின் மாபெரும் வெற்றிக்கு மீண்டும் ஒருமுறை மனமார்ந்த வாழ்த்துகளையும், எதிர்காலப் பணிகளுக்கு எனது நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.– தொழிலதிபர் ஆறுமுகம் சுரேஷ்



