25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

🗳️ அக்டோபரில் தேர்தல்? அன்வார் அரசு பரிசீலனை;எரிபொருள் மானியக் குறைப்பு பின்னணியில் அரசியல் கணக்கு!

🔥 Views : 14
👁 Reading Now : 36

மலேசியாவில் வரும் அக்டோபர் மாதத்திற்குள் பொதுத் தேர்தலை நடத்தும் வாய்ப்பு குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பரிசீலித்து வருகிறார் என சர்வதேச செய்தி நிறுவனம் புளூம்பர்க் தகவல் வெளியிட்டுள்ளது.

உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அரசாங்கம் எரிபொருள் மானியங்களில் அரசியல் ரீதியாக முக்கியமான மாற்றங்களை செய்ய ஆய்வு செய்து வருகிறது.

இந்த சூழலில்,
“மூன்றாவது காலாண்டுக்குள் தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது,” என இந்த விவகாரத்தை அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமர் அன்வாரின் தற்போதைய பதவிக் காலம் 2028 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முடிவடையவுள்ளது.
ஆனால் அதற்கு முன்னர், மானியக் குறைப்புகள் போன்ற சவால்கள் அதிகரிக்கும் முன் தேர்தலை நடத்துவது குறித்தும் சிந்தனை இடம்பெறுகிறது என கூறப்படுகிறது.

இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாததால்,
சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தங்களது அடையாளத்தை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளன.

எனினும்,

  • இந்த ஆலோசனைகள் இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளன
  • இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை

என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பிரதமர் அலுவலகமும் நிதியமைச்சகமும் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வழங்கவில்லை.

இந்த தகவல், நாட்டின் அரசியல் சூழலில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles