26.4 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

தாய்மொழிப் பள்ளிகளை படிப்படியாக அகற்ற வேண்டுமா? பெர்சத்து கட்சியை சாடினார் சுரேந்திரன் பலராமன்

நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் படிப்படியாக அகற்றப்பட வேண்டும் என்று பெர்சத்து தகவல் பிரிவு தலைவர் அஸ்ராட் வலியுறுத்தி இருப்பதை ஜொகூர் மாநில ஜசெக தலைவர்களில் ஒருவரான சுரேந்திரன் பலராமன் மிகக் கடுமையாக சாடியுள்ளார். வங்களாதேசிகள் கூட நன்றாக மலாய் மொழியில் பேசுகிறார்கள். ஆனால் தாய்மொழி பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மலாய் மொழியில் திறமை பெற்றிருக்கவில்லை என்று அவர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றார் அவர். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் இந்த நாட்டில் தாய் மொழிப் பள்ளிகள் உள்ளன. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தாய் மொழிப் பள்ளிகளை அகற்ற நினைக்கலாம் என்று பகல் கனவு காண வேண்டாம். தாய்மொழி பள்ளியில் படித்தவர்கள் இன்று பல அனைத்துலக அரங்கில் வெற்றிகளை குவித்து வருகிறார்கள். ஆகவே இந்நாட்டில் தாய்மொழிப் பள்ளிகளை அகற்றிவிடலாம் என்று இறுமாப்பில் இருக்கவேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles