
கல்வி அமைச்சின் அங்கிகாரத்தோடு நடத்திய அனைத்துலக அறிவியல் புத்தாக்க போட்டியில் தேசிய மாதிரி மெதடிஸ் மாலிம் நாவார் தமிழ் பள்ளியைச் சார்ந்த இரண்டாம் ஆண்டு மாணவிகள் முதன் முறையாகக் கலந்துக் கொண்டு தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளனர்.
தலைமையாசிரியர் ஆ. லோகேஸ்வரி ஊக்குவிப்பில் இப்போட்டியில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மாணவி ஹனுஷ்கா பிரியா த/பெ தேவிந்திரன், அவிலா தீபிகா த/பெ தியாகராஜன் ஆகிய இரண்டாம் ஆண்டு மாணவிகள் ஆசிரியர் ஞானஜோதி வழிக்காட்டலில், பள்ளியின் மற்ற ஆசிரியர்களின் உறுதுணையுடனும் இப்போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றுள்ளனர்.
