26.4 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

தமிழ்ப்பள்ளியே நமது தேர்வாகட்டும், தமிழ்ப்பள்ளிகளை காப்போம் ! அழகேந்திரன் கோரிக்கை

மலேசிய நாட்டில் தமிழ்க்கல்வி 200 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ளது. தற்சமயம் நாட்டில் 527 தமிழ்ப்பள்ளிகள் இயங்கும் நிலையில் மேலும் 5 புதிய தமிழ்ப்பள்ளிகள் கட்டுமானத்தில் இருப்பது மகிழ்ச்சிக்குறிய விசயமாகும். ஆரம்ப காலங்களில் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சதவிகிதம் அடிப்படையில் அதிகமாகவே இருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்துக்கொண்டே வருகிறது. 1957ஆம் ஆண்டுகளில் இதே நாட்டில் 888 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. தோட்டத் துண்டாடல் மற்றும் நகர்ப்புற வாழ்க்கை காரணமாக தோட்டப்புற பள்ளிகளில் உள்ள மாணவர் எண்ணிக்கை குறைந்த நிலையில் பல தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டன. 387 தமிழ்ப்பள்ளிகள் புறநகரங்களில் குறிப்பாக தோட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்தியர்கள் தோட்டப் புறத்தை விட்டு வெளியேறியது தமிழ்ப்பள்ளிகளின் மாணவர் சரிவுக்குப் மிகப் பெரிய காரணமாக தெரிகிறது. குறைந்த மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகள், தமிழ்ப் பள்ளிகளின் எதிர்காலத்திற்கு மிக சவாலான சிக்கலாக அமையலாம். இன்று இதே நிலை நீடித்தால், இருக்கும் சில தமிழ்ப்பள்ளிகளும் மூடும் அபாயத்தை சந்திக்கும். நமது குழந்தைகள் மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்க்காலத்தை கருத்தில் கொண்டு நமது குழந்தைகளை தமிழ்ப்பள்ளிக்கே அனுப்புவோம். தமிழ்ப்பள்ளிகளை காப்போம் என்று முன்னாள் இஸ்கண்டார் புத்திரி நகராண்மைக் கழக உறுப்பினர் அழகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles