33.9 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

முற்போக்கு சிந்தனை கொண்ட அரசாங்கத்திற்கு வாக்களிப்போம்! மாண்புமிகு இராமகிருஷ்ணன் வேண்டுகோள்

🔥 Views : 7
👁 Reading Now : 49

ஓட்டுரிமை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய கடமையாகும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அதை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என்று ஜொகூர் பெக்கோ சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ் இராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். 18 வயதினர், வேட்பாளராகவும் நிற்கவும் மற்றும் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளார்கள். இந்த வாய்ப்பை நம் இந்திய இளைஞர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தேர்தல்களில் வாக்களிக்க போகும் நம் இந்திய இளைஞர்கள், முதலில் நம் நாட்டு நடப்புகளை அறிந்திருக்க வேண்டும். இதற்கு முன்பு எந்த கட்சிகள் ஆட்சி செய்து, அவர்களிடம் புதிய சிந்தனைகள் உள்ளதா, புதிய கொள்கைகள் உள்ளதா என்பதை வாக்களிக்கும் முன் மதிப்பிட வேண்டும். நம் இளைஞர்கள் மாற்றத்தையும் புதிய சிந்தனைகளையும் விரும்பக்கூடியவர்கள் வரவேற்க கூடியவர்கள். ஆகையால், நம் வாக்களிக்க தேர்ந்தெடுக்கும் கட்சிகளும் புதிய சிந்தனைகளையும் கொள்கைகளையும் கொண்ட கட்சிகளாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles