
உலகையே உலுக்கிய வரும் ஒமிக்ரோன் வைரஸுக்கு எதிராக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழ உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா கேட்டுக் கொண்டுள்ளார். ஒமிக்ரோன் மலேசியாவிலும் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக முகக்கவசம் அணிவது, கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பது போன்ற நிலையான எஸ்ஓபி விதிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்து கடைபிடித்து வரவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். ஒமிக்ரோன் தொற்றின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது நமக்கு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அது டெல்டா வகை தொற்றை விட மோசமானதாக இருக்குமா என்பதும் நமக்கு தெரியாது. ஆகவே பொதுமக்கள் பொது இடங்களில் இருக்கும் போது கட்டொழுங்கை கடைபிடிப்பது அவசியமாகும் என்றார் அவர்.
