
இந்தோனேசியா பாலி நகரில் நடைபெற்று வரும் உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இறுதி ஆட்டத்திற்கு இந்தியாவின் பி.வி. சிந்து தேர்வு பெற்றார். இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து ஏ பிரிவில் இரண்டு போட்டிகளில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்நிலையில் நேற்றிரவு நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியுடன் சிந்து மோதினார். இருவருக்கும் இடையே போட்டி கடுமையான போட்டி ஏற்பட்டது. முதல் செட்டை 21-15 என்ற புள்ளிக்கணக்கில் சிந்துவும், இரண்டாவது செட்டை 15-21 என்ற புள்ளிக் கணக்கில் அகானேவும் கைப்பற்றினர். மூன்றாவது செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றிய சிந்து வெற்றிபெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் தென் கொரியா வீராங்கனை ஆன் சி சியோங்கை எதிர்த்து சிந்து விளையாடுகிறார்.
