
வரும் பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடுவது உட்பட கட்சி உறுப்பினர்களின் மாறுபட்ட கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கப்படும் என்று கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கண்ட தோல்விக்கு நாம் தீர்வுகள் காண வேண்டும். மேலும் கட்சி உறுப்பினர் முன் வைக்கும் மாறுபட்ட கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கப்படும் என்று அவர் சொன்னார். இதனிடையே வரும் பொதுத் தேர்தலில் கெஅடிலான் தனித்து போட்டியிட வேண்டும் என்று ஜொகூர் பாசிர் கூடாங் கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் கரிம் தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் மற்ற கட்சிகள் கெஅடிலான் சின்னத்தை பயன்படுத்த மறுப்பதால் நாம் இந்த முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
