33.1 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

பாஸ் தலைவரின் அறிக்கை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது

🔥 Views : 6
👁 Reading Now : 42

மூவாபாக்காட் நேஷனல் கூட்டணியில் பெர்சத்து கட்சி இடம் பெற வேண்டும். ஒரு வேளை பெர்சத்து கட்சியை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அம்னோ கூறினால் இந்த கூட்டணியை புறக்கணிக்கும் என்று பாஸ் தலைவர் ஹாடி அவாங் அறிவித்துள்ள அறிக்கை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று பாஸ் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ தக்குயூடின் ஹசான் தெரிவித்தார். தற்போது இந்த விவகாரம் பெரிய அளவில் பிரச்சினையாகி உள்ளது என்று அவர் சொன்னார். இந்த குற்றச்சாட்டு தொடர்பில் பதிலடி தரும் வகையில் அம்மோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் பதில் கொடுத்துள்ளார். பக்கத்தான் ஹரப்பானை எதிர்க்கும் வகையில் மூவாபாக்காட் நேஷனல் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டது. அப்போது அதில் அம்னோ மற்றும் பாஸ் கட்சி இடம் பெற்றன. மூவாபாக்காட் நேஷனல் தொடங்கும்போது பெர்சத்து கட்சி பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் இருந்தது. ஆகவே மூவாபாக்காட் நேஷனலை அம்னோ மீறவில்லை என்று அவர் பதில் அளித்துள்ளார். இதற்கு விளக்கம் அளித்துள்ள டத்தோஸ்ரீ தக்குயூடின் ஹசான் மூவாபாக்காட் நேஷனல் தொடங்கும்போது பெர்சத்து இல்லை என்பது உண்மைதான். இருப்பினும் இப்போது இதர கட்சிகள் சேர்த்து கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles