28.8 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

புதிய கட்டடம் கட்டுவதற்கு அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் எதிர்ப்ப

பிரிக்ஃபீல்ட்ஸ் வட்டாரத்தில் அமைந்திருக்கும் Scott Sentral, Villa Scott ஆகிய இரு சொகுசு அடுக்ககத்திறகு இடையே இருக்கும் சிறிய நிலத்தில் SOHO Small Office Home Office எனப்படும் அலுவலகக் கட்டடம் கட்டுப்படுவதைக் கண்டித்து அந்த இரு அடுக்ககக் குடியிருப்பாளர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். 38 மாடி உயரம் கொண்ட அந்தக் கட்டடத்தை 1,200 சதுர அடி நிலத்தில் கட்டப்படுவது பல சிக்கல்களைக் கொண்டுவரும் என அவர்கள் கூறுகின்றனர். பொது மக்களுக்கு இடையூறாகவும் இங்குள்ள அடுக்ககவாசிகளுக்கு ஆபத்தாகவும் இருக்கும் இந்தக் கட்டுமானப் பணிக்கு எந்த அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்பட்டது என DBKL எனப்படும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தையும் வீடமைப்பு, ஊராட்சி மன்ற அமைச்சையும் எதிர்த்து அவர்கள் குரல் எழுப்பியுள்ளனர். மேலும், இந்த அலுவலகக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டால், அந்தப் பகுதியில் 100 மீட்டர் தொலைவே உள்ள பிரிக்ஃபீல்ட்ஸ் மகா மாரியம்மன் கோவில் உட்பட சுற்றூ வட்டார 5 கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாகவும் இருக்கும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles