33.1 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

கொலைகளை நிறுத்துங்கள்’ – தாலிபனிடம் கூறும் அமெரிக்கா, நட்பு நாடுகள்

🔥 Views : 7
👁 Reading Now : 66

ஆப்கன் பாதுகாப்புப் படை முன்னாள் வீரர்களை குறிவைத்துக் கொலை செய்வதை நிறுத்த வேண்டும் என்று தாலிபன்களுக்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக, 22 நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில், ஆப்கன் முன்னாள் அரசு மற்றும் பாதுகாப்புப் படை பணியாளர்களை துன்புறுத்த மாட்டோம் என, தாலிபன்கள் அளித்த உறுதிமொழியை மதித்து நடக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், “ஆப்கன் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்த வீரர்கள் கொலை செய்யப்படுவது, திடீரென காணாமல் போவது குறித்த செய்திகள் எங்களை கவலையடையச் செய்துள்ளன” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles