
போர்ட்டிக்சன் தமிழ்ப்பள்ளியில் பச்சைத் திரையரங்கத்தின் திறப்பு விழா ஜுலை 24 ஆம் தேதி கோலாகலமாக திறப்பு விழா கண்டது. பள்யியின் விவேகானந்தர் மண்டபத்தில் தலைமையாசிரியர் திருமதி திலகா நடேசன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நெகிரி செம்பிலான் மாநில கல்வி அமைச்சின் பள்ளி மூத்த ஆய்னர் முனைவர் திருச்செல்வம், டத்தோ ரவி முனுசாமி, மாநில கல்வி இலாகாவின் சிறப்பு வகைப்பள்ளி பிரிவு தலைமை உதவி இயக்குநர் தனபாலன் நாராயணன், மாநில கல்வி இலாகாவின் மொழிப்பிரிவு உதவி இயக்குநர் செல்மணி பாஸ்கரன், பள்ளி வாரியத் தலைவர் இன்ஸ்பெக்டர் அருள்குமரன் நாகப்பன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பிரசாத் குமரன் ஜெயரத்தினம் மற்றும் பள்ளி துணை தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர். போர்ட்டிக்சன் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் நவீனத் தொழில்நுட்ப அறிவைப் பெறுவதற்காகப் பள்ளிகளில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள டிஜிட்டல் ஊடகப் படப்பிடிப்பு அரங்கமான பச்சைத் திரையரங்கம், மாணவர்களின் டிஜிட்டல் கல்வி அறிவை வளர்த்துக்கொள்ள பெரும் துணைப்புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




