26.3 C
Kuala Lumpur
Wednesday, September 30, 2026

Vetri

கோலாலம்பூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘Mid-Day Gems of India Awards’ – சிறப்பு விருந்தினராக YB டாக்டர் குணராஜ்!

🔥 Views : 2,424
👁 Reading Now : 41

இந்தியா மற்றும் மலேசியாவைச் சேர்ந்த தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறையில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘Mid-Day Gems of India Awards’ விருது விழா கோலாலம்பூரில் நடைபெற்றது. இவ்விழாவில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் குணராஜ் கலந்து சிறப்பித்தார். இந்தியாவைச் சேர்ந்த பல வெற்றிகரமான தொழிலதிபர்கள், குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் (IT), கட்டுமானம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்கள் இவ்விழாவில் விருதுகளைப் பெற்றனர். விழாவை பிரபல சமூக செயற்பாட்டாளரும் தொழில்துறை சார்ந்த முக்கியப் பிரமுகருமான அம்ருதா ஃபட்னாவிஸ் (Amruta Fadnavis) தலைமையேற்று நடத்தினார். மேலும், இந்நிகழ்வில் மலேசியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அவர்களில் அன்வார் இப்ராஹிமுக்கான சிறப்பு அதிகாரியாக பணியாற்றும் ஷண்முகம் மூக்கன், மலேசியாவுக்கான இந்திய துணை உயர் ஆணையரகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். இந்த விருது விழா, இந்தியா மற்றும் மலேசியாவுக்கு இடையிலான வர்த்தக மற்றும் தொழில் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்ததுடன், பல்வேறு துறைகளில் சாதித்து வரும் தொழில்முனைவோரின் பங்களிப்புகளை கௌரவிக்கும் முக்கிய நிகழ்வாகவும் அமைந்தது. மலேசியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள், தொழில் முனைவோர் மற்றும் சமூகப் பிரமுகர்கள் பெருமளவில் கலந்துகொண்ட இந்த விழா, இரு நாடுகளுக்கிடையேயான தொழில் மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கான ஒரு முக்கிய சந்திப்பாக அமைந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles