
பேரப்பிள்ளைகளை காண சிங்கப்பூர் சென்றபோது அங்கு கோல்ஃப் விளையாடியதை விமர்சித்திருக்கும் தரப்பினரை முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று சாடியுள்ளார். சிங்கப்பூரில் பேரப்பிள்ளையைப் பார்ப்பதற்காக, நீதிமன்றத்தில் டத்தோஸ்ரீ நஜீப் கடப்பிதழை பெற்றிருந்தார். சிங்கப்பூருக்கு சென்றிருந்த அவர் Rolls Royce காருடன் நின்றுக் கொண்டும், கோல்ப் விளையாடியப் பின்னரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வலைத்தளங்களில் பகிரப்பட்டன. அந்த புகைப்படங்கள் வைரலானதை அடுத்து சிங்கப்பூருக்குச் சென்ற தாம் 24 மணி நேரமும் பேரப்பிள்ளையுடனேயே இருக்க வேண்டுமா என, தம்மை குறைகூறியவர்களை டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நஜீப் சாடியுள்ளார். புகைப்படத்தில் உள்ள Rolls Royce கார், சிங்கப்பூர் கோடீஸ்வரர் Sam Goi Seng Hui என்பவருக்கு சொந்தமானதாகும். 6 தினங்கள் சிங்கப்பூரில் இருந்த தம்மை சந்திக்கவிரும்புவதாக அந்த சிங்கப்பூர் கோடீஸ்வரர் கேட்டுக் கொண்டார். அவர் தமது பொருளாதார கொள்கைகளால் கவரப்பட்டவர் என நஜீப் குறிப்பிட்டார். மலேசியாவில் முதலீடு செய்வது குறித்து அந்த சிங்கப்பூர் கோடீஸ்வரர் ஆலோசனைகளைக் கேட்டறிந்ததாகவும் டத்தோஸ்ரீ நஜிப் சுட்டிக்காட்டினார்.
