27.5 C
Kuala Lumpur
Tuesday, June 9, 2026

Vetri

ஒமிக்ரோன் வைரஸுக்கு பலியான முதல் நபர்! பிரிட்டனில் அதிர்ச்சி அலைகள்

🔥 Views : 7
👁 Reading Now : 64

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தற்போது ஒரு சில நாடுகளில் ஒமிக்ரோன் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பிரிட்டனில் தினந்தோறும் ஒமிக்ரோன் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது அந்நாட்டு அரசுக்கு கவலை அளிக்கும் செய்தியாக உள்ளது. இந்த நிலையில் பிரிட்டனில் முதல் ஒமிக்ரோன் வைரஸ் தொற்று உயிரிழப்பு பதிவாகி உள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று அறிவிப்பு செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து பிரிட்டனில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 18 வயதுக்குட்பட்டோர் மூன்றாவது தடுப்பூசியை இவ்வாண்டு இறுதிக்குள் போட்டுக்கொள்ள வேண்டும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் உத்தரவு பிறப்பித்தார். இதனிடையே ஒமிக்ரோன் வைரஸுக்கு எதிராக பிரிட்டன் அரசு உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் 74,000 பேர் பாதிக்கப்படலாம் என்று அந்நாட்டின் புதிய அறிவியல் ஆய்வு எச்சரித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles