
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய 14 ராணுவ வீரர்களுக்கு, காட்டேரி பூங்காவில் நினைவு சின்னம் இந்திய அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே, காட்டேரியில், 5 ஏக்கரில் தோட்டக்கலைத் துறை பூங்கா அருகே தோட்டக்கலைத் துறை பண்ணை உள்ளது. சமீபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட, 14 ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்தனர். இந்த விபத்து நிகழ்ந்த இடமான நஞ்சப்பசத்திரம் மக்கள், தோட்டக்கலை பண்ணை சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து, காட்டேரி பூங்கா மற்றும் பண்ணை, 100 மீட்டர் தொலைவில் உள்ளது. எனவே, விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் நினைவாக, காட்டேரி பூங்கா அல்லது பண்ணையில் நினைவு துாண் அல்லது சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.


