
பார்வை குறை கொண்ட மாணவர்களுக்கு அடுத்தாண்டு தொடங்கி மூக்கு கண்ணாடி வழங்கும் திட்டத்தை பத்தாங் காலி தொகுதி தொடங்கவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாலர் பள்ளியிலிருந்து ஆரம்ப பள்ளிக்குச் செல்லும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு இந்த உதவியை வழங்க தாங்கள் திட்டமிட்டுள்ளதாக தொகுதி ஒருங்கிணைப்பாளர் சைபுடின் ஷாபி முகமது அறிவித்தார். 2022 ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில பட்ஜெட்டில் தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 300,000 வெள்ளி மானியத்தில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும். முக்கு கண்ணாடியைப் பெறுவதற்கான வசதி இல்லாத காரணத்தால் கல்வி பாதிக்கப்படும் மாணவர்கள் நம்மிடையே உள்ளனர். அவர்களுக்கு உதவ இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.
