27.5 C
Kuala Lumpur
Tuesday, June 9, 2026

Vetri

சிலாங்கூர் மாநிலத்தில் மாற்றுத் திறனாளின் பெற்றோர்களுக்கு மருத்துவப் பரிசோதனை

🔥 Views : 6
👁 Reading Now : 65

சிலாங்கூர் மாநிலத்தில் மாற்றுத் திறனாளி பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ளும் சிலாங்கூர் மாநில அரசின் திட்டம் மக்கள் நலனில் அரசு கொண்டுள்ள அக்கறையை புலப்படுத்தும் வகையில் உள்ளது. மாற்றுத் திறனாளி பிள்ளைகளைப் பராமரிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதோடு அதற்கு பெற்றோர்கள் ஆரோக்கியத்துடன் இருப்பது அவசியம் என்று சிலாங்கூர் மனவளர்ச்சி குன்றிய சிறார் பராமரிப்பு சங்கத்தின் தலைவர் எஸ். முருகையா ஜீவன் கூறினார். இத்திட்டம் தொடர்பான மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் அறிவிப்பை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம். சமூக நலனில் மட்டுமின்றி மாற்றுத் திறனாளிகள் விஷயத்திலும் மாநில அரசு கொண்டுள்ள பரிவை இது காட்டுகிறது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles