29.7 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

ஊரடங்கு நீட்டிப்பா? – மருத்துவ குழுவினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

🔥 Views : 10
👁 Reading Now : 29

தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை வேகம் எடுத்துள்ள நிலையில், அதை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கடந்த 10-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனா பரவல் குறையவில்லை. தொடர்ந்து, அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தினமும் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துவிட்டது.

இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்புக்கான காரணம் குறித்தும், அதை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் மருத்துவ குழுவினர் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles