
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8,219 பேர் இதுவரை 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றுள்ளனர். சிலாங்கூர் எழுச்சிமிகு திட்டத்தின் வழி மாநில அரசு இதுவரை 82 லட்சத்து 39 ஆயிரம் வெள்ளியை செலவிட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். உதவித் தொகை வழங்கும் பணியை எளிதாக்க மாநில அரசு வீடு வீடாகச் சென்று உதவித் தொகையை வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று அவர் சொன்னார். மூன்று வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரிடரைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மாநில அரசு சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 10 கோடி வெள்ளியை ஒதுங்கியது என்பது குறிப்பிடத்தக்கது
