
தாய்மொழிப் மொழிப் பள்ளிகளின் சட்டப்பூர்வமான தன்மையை எதிர்த்து போராடும் ஓர் அரசு சாரா நிறுவனத்திற்கு உதவுவதற்காக, பெம்பேலா இஸ்லாம் (Pertubuhan-Pertubuhan Pembela Islam) அமைப்புகள், பொதுமக்களிடம் இருந்து நன்கொடைகளைச் சேகரிக்க ஒரு நிதியைத் தொடங்கி இருக்கின்றது. அதன் தலைவர் அமினுதீன் யஹாயா (Aminuddin Yahaya) கூறுகையில் ’இதுவரையில் அந்த அரசு சாரா அமைப்புகள் சொந்தப் பணத்தைப் பயன்படுத்தி வந்தன. அவர்களின் அந்தச் சுமையை இந்த நிதி, ஓரளவுக்கு குறைக்க முடியும்.’ தாய்மொழிப் பள்ளிகளுக்குச் சவால் விடுக்கும் எங்கள் போராட்டத்திற்காக ஒரு நிதியைத் திறக்க வேண்டும் என்று பொது மக்கள் பலர் கேட்டுக் கொள்கிறார்கள்.’ இந்த வழக்கு நீண்ட காலத்திற்கு நீடிக்கும். மேல்முறையீட்டு உயர் நீதிமன்றத்திற்குச் செல்லும். ஆகவே எங்களின் செலவுகளுக்காக ஒரு நிதியைத் திறக்க வேண்டிய அவசியத்தை நானும் என் தோழர்களும் உணர்கிறோம் என்று அவர் சொன்னார்.
