25.7 C
Kuala Lumpur
Monday, September 28, 2026

Vetri

முக்ரிசின் போக்கிரித்தன அரசியல்!

🔥 Views : 30
👁 Reading Now : 60

கெடா மாநில மந்திரி பெசாராக இரண்டு முறை பதவி ஏற்றும் ஒரு தவணை கூட முழுதாக ஆட்சி நடத்த வக்கில்லாத டத்தோஸ்ரீ முக்ரிஸ், எதிர்கால பிரதமராக பார்க்கப்படும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீது நம்பிக்கை குறைவாக இருப்பதாக கருத்து தெரிவித்து இருக்கக்கூடாது என்று பி.கே.ஆர். பாசிர் கூடாங் எம்பி ஹசான் அப்துல் கரிம் சாட்டையை சொடுக்கி உள்ளார். அன்வாரிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக் கொண்ட துன் மகாதீர், மலேசிய அரசியலில் மீண்டும் மீண்டும் அன்வாருக்கு எதிராகவே கருத்து தெரிவிப்பதுடன் சூழ்ச்சி அரசியலையும் மேற்கொண்டு வருகிறார். அப்படிப்பட்ட அப்பாவின் வேலையைத் தொடர இப்போது மகன் முன்வந்திருப்பதாகத் தெரிகிறது. மகாதீருக்கே எல்லாமும் எல்லாக் காலத்திலும் சாதகமாக இருக்காது. அன்வார் பக்கம் காற்றடிக்கும் நேரமும் வரும் என்று ஹசான் அப்துல் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles