33.9 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஜனவரி மாதம் தண்ணீர் கட்டண விலக்களிப்பு!

சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஜனவரி மாதத்தில் தண்ணீர் கட்டண விலக்களிப்பு வழங்கப்படும என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். இந்த சலுகையைப் பெற அவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டியதில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சுமையைக் குறைக்க தண்ணீர் கட்டணத்தை செலுத்துவதிலிருந்து ஒரு மாதத்திற்கு விலக்களிக்கப்படுகிறது. இந்த சலுகை வழங்கப்படும் இடங்கள் குறித்த பட்டியலை Pengurusan Air Selangor அகப்பக்கத்தில் காணலாம். சம்பந்தப்பட்ட இடங்களில் வசிப்பவர்கள் இந்த தண்ணீர் கட்டணச் சலுகையைப் பெற முடியும் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles