28.4 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

தாமான் ஸ்ரீ மூடாவில் 16 முறை வெள்ள அபாய சங்கு!

கடுமையான வெள்ளம் ஏற்பட்ட டிசம்பர் 18 ஆம் தேதியில் தாமான் ஸ்ரீ மூடா 2 அபாய சங்கு நிலையத்திலிருந்து 16 முறை வெள்ள அபாய ஒலி எழுப்பப்பட்டதாக வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை கூறியுள்ளது. அதே நிலையத்திலிருந்து மேலும் ஆறு முறை எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதாக அத்துறை பேஸ்புக் வாயிலாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. ஸ்ரீ மூடா 2 அபாய சங்கு நிலையத்திலிருந்து 10.30 மணி முதல் எச்சரிக்கை ஒலி ஒலிக்கத் தொடங்கியது. அதே சமயம் பிற்பகல் 12,30 மணி முதல் இரவு 8.00 மணி வரை அபாய ஒலி ஒலிக்கப்பட்டது என்று அவ்வறிக்கை கூறியது. தாமான் ஸ்ரீ மூடா 3 நிலையத்திலிருந்து 10 முறை அபாய மற்றும் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles