30.3 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

ஏர் ஆசியா தன் பெயரை மாற்றுகிறது!

🔥 Views : 5
👁 Reading Now : 50

விமான பயண சேவையில் கொடிகட்டப் பறந்த ஏர் ஆசிய நிறுவனம் தன்னுடைய பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளது. இதன் தொடர்பில் அதன் பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறுவதற்காக ஜனவரி மாதம் 27-ஆம் நாள் சிறப்புப் பொதுக் கூட்டத்தை(இஜிஎம்) நடத்துகிறது. இந்திராகோத்தா பேருந்து சேவைக்கு முன் கோலாலம்பூரின் அடையாளமாக இருந்த மினி பேருந்துகளில் பயணம் செய்யும் அனுபவத்தை வான வீதியில் நமக்கு அளித்து வந்தது மலிவு விலை விமான பயண சேவை நிறுவனமான ஏர் ஆசியா, தன் பெயரையே மாற்றிக் கொள்ள வேண்டிய நிலையை கொரோனா ஏற்படுத்தி உள்ளது. நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பயணிகளை அள்ளிக் கொண்டு உலக நாடுகளில் உல்லாச உலா வந்த ஏர் ஆசிய நிறுவனம், இப்போது டிஜிட்டல் பயணம் மற்றும் வாழ்க்கை முறை சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளதால் குறிப்பாக சரக்கு போக்குவரத்தில் மும்முரம் காட்டிவரும் ஏர் ஆசியா தன் கட்டமைப்பையும் பெயரையும் மாற்றிக்கொள்ள விரும்புகிறது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles