29.6 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

நாடு முழுவதும் 9,505 பேர் தற்காலிக முகாம்களில் தங்கி உள்ளனர்!

🔥 Views : 6
👁 Reading Now : 47

தேசிய அளவில் வெள்ள நிலைமை ஓரளவு தணிந்துள்ள நிலையில் இன்று ஜனவரி 6-ஆம் நாள் காலை 6:00 மணி நிலவரப்படி 9,505 பேர் 126 தற்காலிக பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 3,011 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இதில் ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம். 1,299 குடும்பங்களைச் சேர்ந்த 4,830 பேர் 69 தற்காலிக மையங்களில் தங்கி உள்ளனர். அடுத்ததாக, சரவாக் மாநிலத்தில் அதிகமான மக்கள் தங்களின் பாதுகாப்பு கருதி தற்காலிக மையங்களை தஞ்சம் அடைந்துள்ளனர். 6 மாநிலங்களில் வெள்ளப் பாதிப்பு தொடரும் நிலையில், சிலாங்கூர் மாநிலத்தில் ஆகக் குறைவானவர்கள் தற்காலிக பாதுகாப்பு மையங்களில் தங்கி வருகின்றனர் என்று தேசிய பேரிடர் நிருவாக அமைப்பான ‘நட்மா’ அறிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles