
பாதுகாப்பு மன்றத்தின் முடிவை ஏற்றுக்கொண்டு, அஸாம் பாக்கியை இத்தோடு விட்டு விடுங்கள் என்று பௌவியமாக கேட்கும் பிரதமர், பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்னும் பாத்திரத்தை அற்புதமாக அரங்கேற்றி வருகிறார். வாழ்த்துகள் அன்பு பிரதமருக்கு.! பங்கு பரிவர்த்தனைத் தொழிலில் இரகசியமாக ஈடுபட்ட மலேசிய ஊழல் தடுப்பு ஆணையர்மீது எந்த வழக்கும் இல்லையாம்; அதனால் அஸாம் பதவியில் தொடரலாமாம். பிரதமர் மஹியாடினால் நியமிக்கப்பட்ட அஸாம், இப்போது அதே மஹியாடின் தலைவராக இருக்கும் பாதுகாப்பு மன்றத்தால் காப்பாற்றப்பட்டுள்ளார். இந்த இரண்டு கட்டங்களிலும் வழிமொழிவதுதான் இஸ்மாயில் சப்ரியின் வேலை என்றாகி விட்டது.
