
இந்திய நாடாளுமன்றத்தில் புரட்சிகரமாக பேசிய காங்கிரஸ் கட்சி மேநாள் தலைவர் ராகுல் காந்தியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெகுவாகப் பாராட்டி உள்ளார்.
இந்திய நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை தொடர்பான கூட்டத் தொடரில் பேசிய ராகுல், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, வெளியுறவுக் கொள்கை, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட அம்சங்களில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தோல்வி அடைந்துள்ளதைக் குறிப்பிட்டு ஆவேசமாகவும் புரட்சிகரமாகவும் பேசியுள்ளார்.
இதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கீச்சகப் பதிவின் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
