25.3 C
Kuala Lumpur
Sunday, April 26, 2026

Vetri

15-ஆவது பொதுத் தேர்தலில் பாஸ் அரசாங்கம் நீக்கப்பட்டால் கிளந்தான் மக்களுக்கு பெட்ரோலிய ராயல்டி தொகை

அடுத்த பொதுத் தேர்தலில் கிளந்தான் மாநிலத்தை ஆளும் பொறுப்பில் இருந்து PAS வெளியேற்றப்பட்டால், அம்மாநில மக்கள் மத்திய அரசிடமிருந்து எண்ணெய் ராயல்டியை அனுபவிக்க முடியும் என்று முன்னாள் சட்ட அமைச்சர் Zaid Ibrahim கூறுகிறார்.

அம்னோ தலைமையிலான கூட்டணி புத்ராஜெயாவை மீண்டும் கைப்பற்றி, கிளந்தான் மாநிலத்திலும் அம்னோ தலைமையிலான ஆட்சி அமைத்தால், வெ.20 பில்லியன் அளவுக்கு கிளந்தான் மக்கள் பெட்ரோலிய தொழில் தொடர்பான ராயல்டி தொகையைப் பெறுவார்கள்.

1975 முதல் எரிநெய் மற்றும் எரிவாயு தொழில் அந்த மாநில கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்படுவதை சுட்டிக் காட்டிய Zaid Ibrahim, இதன் தொடர்பில் ஒரு பரிந்துரையை அம்னோ தலைமையிடம் முன்மொழிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles