
ஹரினி மை ஃபேம் நட்சத்திர பாடல் போட்டி & சிறப்பு விருது விழா பிப்ரவரி 20-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 3:00 மணி அளவில் கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது. இதன் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் 100 க்கும் மேற்பட்ட 12 வயது முதல் 18 வயது வரைக்குமான மாணவர்கள் பங்கேற்றனர். கட்ட கட்டமாக நடைபெற்ற இந்தப்போட்டியின் இறுதிச் சுற்றுக்கு 8 போட்டியளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதிப் போட்டி பிப்ரவரி 20-இல் நடைபெறும் வேளையில் 90 ஆம் ஆண்டுகள் கலைஞர்களுக்கு சிறப்பு செய்யும் வகையில் 5 பேர் தனித்துவமாக சிறப்பிக்கப்பட உள்ளனர். அதேவேளை, இந்திய காற்பந்தாட வீரர்கள் 10 பேர் சிறப்பிக்கப்பட இருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு வர்த்தகத் துறையில் மேலோங்கி வரும் டத்தோ டாக்டர் சிவா ஆதரவு வழங்குகிறார் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டுத் துறையில் 20 ஆண்டு அனுபவம் பெற்ற சுவாரா செனிமான் நிறுவனம் சார்பில் அன்புள்ள கவிமாறன் தெரிவிக்கிறார்.
