
கொரோனா பரவல் காரணமாக எழுந்த பல்வேறு சிக்கலால், கடந்த ஈராண்டுகளில் நாட்டில் 2,000-கும் அதிகமான இந்திய முஸ்லிம் உணவகங்கள் மூடப்பட்டன என்று PRESMA எனப்படும் மலேசிய இந்திய முஸ்லீம் உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் Datuk Jawahar Ali Taib Khan தெரிவித்தார். கோவிட் தொற்றினால் அந்நிய நாட்டு தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியதாலும் உள்நாட்டுத் தொழிலாளர்கள் உணவகத் துறையில் வேலை செய்ய முன் வராததாலும் , பலரால் உணவகங்களைத் தொடர்ந்து நடத்த முடியாமல் போய்விட்டது. தற்போது இந்த உணவகத் தொழில் சங்கத்தில் 10,000 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நாடு முழுவதுமுள்ள இந்திய முஸ்லீம் உணவகங்களில் வேலை செய்ய ஏறக்குறைய 30,000 தொழிலாளர்கள் தேவைப்படுவதாகவும் Jawahar Ali கூறினார்.
