
மார்ச் மாதம் 12-ஆம் நாள் நடைபெறவுள்ள ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில், நம்பிக்கைக் கூட்டணியுடன் மலேசிய ஐக்கிய ஜனநாயக முன்னணி என்னும் மூடாக் கட்சியும் சேர்ந்து களம் கண்டால், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சைட் சாடிக் தலைமையிலான மூடாக் கட்சியின் கொள்கை, நம்பிக்கைக் கூட்டணியின் சிந்தாந்தத்துடன் பெரும்பாலும் ஒத்திருப்பதால், நகர்ப்புற தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களை, அதிலும் இளம் வாக்காளர்களை பேரளவில் கவர முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர். இந்த நிலை, ஜோகூர் தேர்தல் களத்தில் இப்பொழுதே பிரதிபலிக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
