
ஜோகூர் தேர்தலில் அம்னோ வீழ்த்தப்பட வேண்டும் என்று டான்ஸ்ரீ முகைதீன் யாசின் உண்மையில் கருதினால், அந்தத் தேர்தலை களத்தில் இருந்து பெரிக்காத்தான் நேஷனல் விலகி நிற்க வேண்டும் என்று ஷா ஆலம் எம்.பி. காலிட் சமாட் கேட்டுக் கொண்டுள்ளார். அம்னோவிற்கு எதிரான வாக்குகள் பிரியாமல் இருக்க வேண்டும் என்றால், பெர்சத்துக் கட்சி இந்த முடிவைத் துணிந்து எடுக்க வேண்டும் என்று அமானாக் கட்சியைச் சேர்ந்தவருமான காலிட் வலியுறுத்தி உள்ளார். கடந்த மலாக்காத் தேர்தலில் இதுதான் நடந்தது; நம்பிக்கைக் கூட்டணி 37 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்ற வேளையில், பெரிக்காத்தான் 25 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று தேசிய முன்னணிக்கு எதிரான வாக்குகளைப் பிரித்தது என்று கூட்டரசுப் பிரதேச முன்னாள் அமைச்சருமான காலிட் கோடிக்காட்டி உள்ளார்.
