28.5 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

கோவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கை: விவாதிப்பதற்காக அடுத்த வாரம் கூட்டம் -ஆட்சிக்குழு உறுப்பினர் சித்தி மரியா

கோவிட்-19 நோய்த்தொற்று பற்றிய துல்லியமான விவரத்தைப் பெறுவதற்கு மாநில அரசு அடுத்த வாரம் சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறையை சந்திக்கும் என்று சிலாங்கூர் ஆட்சிக்குழு பொது சுகாதாரப் பிரிவு உறுப்பினர் சித்தி மரியா மாமூட் தெரிவித்துள்ளார். புதிதாக தொற்று ஏற்படும் இடம், தொற்று பரவுவதை தடுப்பதற்கான வழிமுறை, ஊக்க தடுப்பூசி, மாநிலத் திட்டங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் குறித்த ஆய்வுகளை உள்ளடக்கியதாக இந்தக் கூட்டம் இருக்கும் என அவர் கூறினார். சிலாங்கூர் தடுப்பூசி (செல்வாக்ஸ்) திட்டத்தின்கீழ் சினோவேக் தடுப்பூசி பெறுபவர்கள், மேலும் ஊக்கத் தடுப்பூசியைப் பெறுவதற்காக ஊக்கப்படுத்தப் படுவார்கள் என்றும் டாக்டர் சித்தி மரியா கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles