27.7 C
Kuala Lumpur
Tuesday, September 29, 2026

Vetri

ரஷ்யாமீது பொருளாதாரத் தடை நேட்டோ தலைவர் எச்சரிக்கை

🔥 Views : 16
👁 Reading Now : 33

யுக்ரேன்மீது படையெடுத்தால், ரஷ்யா அதிக விலை கொடுக்க நேரிடும் என்று நேட்டோ அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் எச்சரிக்கை செய்துள்ளார். குறிப்பாக, ரஷ்யாமீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று ப்ரசல்ஸ் நகரில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். 2014 இல் ரஷ்யா க்ரைமியாவை இணைத்தபோது இருந்ததைவிட யுக்ரேன் இப்போது சிறந்த பயிற்சி மற்றும் ஆயுத வலிமை கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று உலக நாடுகள் அழுத்தம் கொடுப்பதால், ரஷ்யா கட்டம் கட்டமாக பின்வாங்கினாலும், “யுக்ரேனுக்கு ஒருவித அச்சத்தை தொடர்ந்து ஏற்படுத்த ரஷ்யா விரும்புகிறது; அது, மிகவும் தீவிரமானது” என்றும் ஸ்டோல்டன்பர்க் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles