
பிப்ரவரி 16-ஆம் நாளில் புதுப்பிக்கப்பட்ட நிலையான SOP நடைமுறையுடனான லங்காவி பன்னாட்டு சுற்றுலா ஏற்பாடு, நாட்டின் எல்லைகள் திறக்கப்படும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 8-ஆம் நாள் கோவிட்-19 தொடர்பாக நடைபெற்ற நான்கு அமைச்சர்க் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தது.
‘எல்ஐடிபி’ மூலம் மலேசியாவுக்குள் நுழையும் வெளிநாட்டுப் பயணிகளுக்கான எஸ்.ஒ.பி. மற்றும் வழிகாட்டிகள் சுகாதார அமைச்சகத்தால் சமீபத்தில் பரிசீலிக்கபட்டு 2022 பிப்ரவரி 16-இல் வெளியிடப்பட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேம்படுத்தபட்ட இந்த எஸ்.ஒ.பி. நடைமுறை, எதிர்கால எல்லைத் திறப்பு SOP நடைமுறைக்கு ஓர் அளவுகோலாக இருக்கும்.
