26.7 C
Kuala Lumpur
Tuesday, September 29, 2026

Vetri

லோரியிலிருந்து கழன்ற வட்டகை மோதியது: -மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

🔥 Views : 20
👁 Reading Now : 61

SKVE நெடுஞ்சாலை, 46 ஆவது கிலோமீட்டரில் கனரக வாகனத்தில் இருந்து கழன்ற டயர் மோட்டார் சைக்கிளோட்டிமீது மோதியதில் அவர் மரணம் அடைந்தார்.

போர்ட் கிள்ளானிலிருந்து ஷா ஆலாம் சென்றுகொண்டிருந்த அந்த வாகனத்திலிருந்து வெளியேறிய வட்டகை, சாலையில் எதிரே வந்து கொண்டிருந்த 40 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டியின்மீது மோதியதாக கோலாலங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் துணை சூப்பிரடண்ட் Kamal Ariffin Aman தெரிவித்தார்.

அந்த ஆடவர் Saujana Putra விலிருந்து போர்ட் கிள்ளானுக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது நிகழ்ந்த இவ்விபத்தில், கடுமையாக காயம் அடைந்தால் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே சம்பந்தப்பட்ட ஆடவர் உயிரிழந்ததாக kamal Ariffin Aman கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles