26.3 C
Kuala Lumpur
Wednesday, September 30, 2026

Vetri

பி.கே.ஆர் துணைத்தலைவர் பதவி: பேராக் பிகேஆரின் Farhash போட்டியா?

🔥 Views : 17
👁 Reading Now : 24

மக்கள் நீதிக் கட்சி-பி.கே.ஆரின் கட்சித் தேர்தல், எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதில், தேசிய துணைத்தலைவர் பதவிக்கு பேராக் மாநில பி.கே.ஆர். முன்னாள் தலைவர் Farhash Wafa Salvador Rizal போட்டியிட இருப்பதாக பிகேஆர் வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.

ஆனாலும், இதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லையென Farhash தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் டத்தோஸ்ரீ அன்வாரின் அரசியல் செயலாளர் பதவியிலிருந்து Farhash விலகினார். பி.கே.ஆர் கோம்பாக் தொகுதித் தேர்தலில் அதன் நடப்பு தலைவரும் சிலாங்கூர் மந்திரிபுசாருமான Amirudin Shariயை எதிர்த்து போட்டியிடப் போவதாக அவர் அண்மையில் கூறியிருந்தார்.

கடந்த 2020-இல் அஸ்மின் அலி பி.கே.ஆர். கட்சியிலிந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து காலியாக இருக்கும் துணைத்தலைவர் பதவிக்கு Farhash குறிவைத்திருப்பதாகக் கூறப்டுகிறது. பி.கே.ஆர். முன்னாள் உதவித் தலைவர் ரபிஷி ரம்லியும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது, குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles