25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

ரஷியாவுடனான இரண்டாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிருப்தி

🔥 Views : 4
👁 Reading Now : 65

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல், உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 
உக்ரைன் எல்லையில் இருக்கும் பெலாரஸின் பிரெஸ்ட் பகுதியில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தூதுக்குழுவினர் நேற்று சென்றனர். ரஷியாவின் சார்பில் அதிபர் புதினின் உதவியாளரான விளாடிமிர் மெடின்ஸ்கி ரஷிய தூதுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  
இதற்கிடையே, ரஷியா – உக்ரைன் இடையேயான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை பெலாரசில் நடைபெற்றது.
இந்நிலையில், ரஷியாவுடனான இரண்டாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிருப்தி அடைந்துள்ளது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் விரைவில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல் வெளியானது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles