32.3 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

ஆட்டோ டிரைவரை விட்டு பிரியாத பாசக்கார குரங்கு

🔥 Views : 8
👁 Reading Now : 40

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த தேவரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 42). ஆட்டோ ஓட்டி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு , ரவியின் ஆட்டோவில் ஒரு குரங்கு ஏறியது. அப்போது ரவி, குரங்கை விரட்டினார். ஆனால் குரங்கு ஆட்டோவை விட்டு செல்லாமல் அடம்பிடித்தது.மேலும் ரவி, ஆட்டோவை எடுத்து கொண்டு சென்றால், குரங்கு அவரது தலையின் மீது அமர்ந்து கொண்டது. இதனால் குரங்கின் பிடியில் இருந்து ரவி சிக்கி தவித்தார். எப்போதும் ஆட்டோவில் குரங்கு இருந்து வந்ததால் பயணிகளும் ஆட்டோவில் ஏற மறுத்தனர்.இதையடுத்து ஆட்டோ டிரைவர் ரவி, குரங்கை தேன்கனிக்கோட்டை வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க நேற்று முடிவு செய்தார். அதன்படி வனத்துறை அலுவலகத்துக்கு வந்த ரவி, குரங்கை ஒப்படைக்க முயன்றார். ஆனால் குரங்கு அவரை விட்டு பிரிய மனமில்லாமல் தலை மீது அமர்ந்து கொண்டது. இதனால் வனத்துறையினரும் குரங்கை பிடிக்க எவ்வளவோ போராடி பார்த்தனர். அப்போது கோபத்தில் இருந்த குரங்கு, கடிப்பது போல் வாயை திறந்து மிரட்டியது.பிறகு ஒருவழியாக வனத்துறை ஊழியர்கள், ரவியிடம் இருந்து குரங்கை பிரித்தனர். ஆனாலும் குரங்கு ரவியை விட்டு இறங்கிய சில நிமிடங்களில் வனத்துறை ஊழியர்களை ஏமாற்றி விட்டு, மீண்டும் ரவியின் மேல் தாவி ஏறியது.குரங்கின் பிடிவாத விளையாட்டால் இதென்ன வம்பா போச்சு…? என்று ரவி மீண்டும் நொந்து போனார். பிறகு ஒருவேளையாக வனத்துறையினர், குரங்கை பிடித்து விட்டு ரவியை ஆட்டோவுடன் அனுப்பினர்.இந்த நிலையிலவனத்துறை ஊழியர்களின் பிடியில் இருந்து நேற்று மாலை குரங்கு தப்பி வெளியே சென்றது. பிறகு தேன்கனிக்கோட்டை ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்து ரவியை அங்குமிங்கும் குரங்கு தேடி பார்த்தது.ஆனால் குரங்கின் வருகையை முன்கூட்டியே தெரிந்து கொண்ட ரவி, தற்போது தனது ஆட்டோவை வேறு இடத்தில் நிறுத்தி சவாரிக்கு சென்று வருகிறார்.ஆட்டோ டிரைவரிடம் ‘குரங்கு’ காட்டிய பாச விளையாட்டு பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles