
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற பகுதியில் இருக்கும் பெஷாவர் நகரில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றது.
அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 பேர் மசூதிக்குள் நுழைய முயன்றனர். அவர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அங்கு பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் 45 பேர் உடல் சிதறி பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது.
