
ஆறு முனைப் போட்டி நிலவும் லார்க்கின் ஜெயா தொகுதியில் பிகேஆர் சார்பில் போட்டியிடும் டாக்டர் Zamil-க்கு ஆதரவான பிரச்சாரக் கூட்டத்தில் பொதுமக்களும் கட்சியினரும் கீழே தொலைவில் அமர்ந்திருக்க கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மட்டும் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் முகக் கவசம் அணியாமல் SOP நடைமுறையை மீறியதாக குற்றம் சொல்லிக்கொண்டு மேடையேறிய ஜோகூர்பாரு சுகாதார அதிகாரியைப் பார்த்து, அருகில் வராமல் அங்கேயே நிற்கும்படி எச்சரித்தார். கூட்ட ஏற்பாட்டாளர்கள் SOP விதிமுறையை பின்பற்றவில்லை என்று தண்டம் விதிக்க முயன்ற அந்த அதிகாரி, கடைசியில் எச்சரிக்கை மட்டும் தெரிவித்துவிட்டு சென்றார். தேர்தல் ஆணையத்தின் SOP விதிமுறையையும் ஒரு மருத்துவருமான என் மனைவியின் ஆலோசனையையும் ஒருசேர பின்பற்றும் தனக்கு சுகாதாரத் துறையினர் இடையூறு செய்வதாக, இதன் தொடர்பில் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரியிடம் அன்வார் புகார் தெரிவித்தார்.



