25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

தேர்தலில் இனி போட்டியில்லையாம்: -மகாதீர் பேச்சை யார் நம்புவார்

🔥 Views : 5
👁 Reading Now : 44

2013 பதின்மூன்றாவது தேர்தல் சமயத்திலேயே இனி நான் தேர்தலில் போட்டி இடப்போவதில்லை என்று சொன்ன துன் மகாதீர், 2018 தேர்தலில் டத்தோஸ்ரீ அன்வாரின் அலையால் லங்காவி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இப்போது இளைஞர்களுக்கு வாய்ப்பு விடுவதற்காக, அடுத்தப் பொதுத் தேர்தலில் போட்டியிடப் பொவதில்லை என்று புதுச்சரடு விடுகிறார். 93 வயதுவரை தேர்தல் களம் கண்டுவிட்டு, இப்பொழுதும் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் இவர், இனி இளைஞர்களுக்கு வழிவிட என்ன இருக்கிறது? மாற்றி மாற்றி பேசுவதிலும் மனமறிந்து பொய் பேசுவதிலும் வல்லவரான இவர், 15-ஆவது பொதுத் தேர்தலிலும் போட்டியிடுவதை எவரும் தடுக்கவில்லை; ஆனால், உண்மை என்னவென்றால் இவரையும் இவரின் பேச்சையும் நாட்டு மக்கள் துளியும் மதிப்பதில்லை என்பதை 2019 நவம்பர் 16 தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலிலேயே சொல்லி அடித்துவிட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles