
நாடாளுமன்றத்தின் நேற்றையக் கூட்டத்தில் இருக்கைகள் காலியாக இருந்ததை சுட்டிக்காட்டிப் பேசிய மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் Syed Saddiq Syed Abdul Rahman, எம்பி-க்கள் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் நிலை அடிக்கடி நேர்ந்தால், மக்கள் பிரதிநிதிகள் எப்படி மக்களுக்கு சேவையாற்ற முடியும் என ஆவேசமாகக் கேட்டார். மலேசியாவில் இன்று நிலவும் அரசியல் நிலைத்தன்மையற்ற போக்கிற்கு அம்னோவே காரணம். கடந்த இரண்டு ஆண்டுகளாக அம்னோ தலைமை ஏற்றதிலிருந்து நான்கு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் இடம்பெற்ற வேளையில், இதில் மூன்று மாநிலங்களின் சட்டமன்றங்கள் கலைக்கப் பட்டுள்ளன என்று அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் கலந்துகொண்டபோது மூடா கட்சியின் தலைவருமான அவர் தெரிவித்தார். எம்பிக்கள் அனைவரும் ஜோகூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக முகாமிட்டுள்ளதால் நாடாளுமன்றம் காலியாக இருப்பது குறித்து தன் வருத்தத்தை அவர் வெளிப்படுத்தினார்.
