
சிங்கப்பூருடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட VTL தரைவழிப் பயணத்துக்கான தினசரி பயணிகளின் எண்ணிக்கை 2,160 பேரிலிருந்து 3,420 -பேராக அதிகரிக்கப்படவுள்ளது. மார்ச் 14 -ஆம் தேதியிலிருந்து இது அமலுக்கு வருவதாக போக்குவரத்து அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது. அந்த கூடுதல் பயணத்திற்கான பயணச்சீட்டு விற்பனை இன்று முதல் தொடங்குமெனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
