
கடந்த 24 மணிநேரத்தில் யுக்ரேன் தலைநகர் கீயவை நோக்கி ரஷ்யப் படைகள் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு முன்னேறி சென்றுள்ளன என அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ரஷ்ய படைகளின் அணிவகுப்பு தலைநகர் கீவுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த அணிவகுப்பு, கடைசியாக ஆண்டோனோவ் விமான நிலையத்தின் வட-மேற்குப் பகுதியில் காணப்பட்டது. யுக்ரேனின் மருத்துவமனைகளை இலக்கு வைத்து குண்டுவீச்சு நடத்திய ரஷ்யாவிற்கு பன்னாட்டு சமூகம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தற்பொழுது ரஷ்ய படைகள் தலைநகர் கீவை நோக்கி முன்னேறி வரும் தகவல் வெளியாகி உள்ளது.
