25.2 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

தந்தையோ ஃபெல்டா நில மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்கினார்; மகன் நஜீப்போ நாட்டின் நிதி வளத்தை சூரையாடினார்

🔥 Views : 8
👁 Reading Now : 40

மலேசியாவின் மானம் பறிபோகும் அளவுக்கு, அமெரிக்காவில் லஞ்ச-ஊழல் வழக்கு நடைபெறுவதற்கு நஜீப் ஆட்சிதான் காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஜோகூர் தேர்தல் களத்தை கலக்கி வருகிறார். இவரின் தந்தையோ நில மேம்பாட்டிற்காக ஃபெல்டா திட்டங்களை உருவாக்கினார். ஆனால், இவரோ நாட்டின் நிதி வளத்தை வகைதொகையின்றி சீரழித்தார். இத்தனைக்கும் சிறைத் தண்டனையும் தண்டமும் விதிக்கப்பட்டு, பிணையில் இருக்கும் நஜீப், ‘என்ன வெட்கம்?’ என்று கேட்டுக்கொண்டு பொதுமக்கள் மத்தியில் அதுவும் SOP நடைமுறையை மதிக்காமல் ஐந்து முறை அபராதம் செலுத்தும் நிலைக்கு ஆளாகி பிரச்சாரம் செய்து வருகிறார். இதுபோன்ற ஜனநாயக அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியை மீண்டும் அரியணையில் அமர்த்துங்கள் என்று ஜோகூர் வாக்களர்களைக் கேட்டு மாநில முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தை அன்வார் மேற்கொண்டு வருகிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles