28.5 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

ஈழத் தமிழர்களின் உரிமைக்காக பொது வாக்கெடுப்பு தேவை: -பேராசிரியர் ராமசாமி

ஈழத் தமிழர்களின் எதிர்காலத்தை முடிவு செய்வதற்காக அவர்களுக்கு பொது வாக்கெடுப்பு தேவைப்படுவதாக பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் ராமசாமி தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த 43 ஆண்டுகளாக அமலில் இருந்து வந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் இலங்கை அரசு இப்போது திருத்தம் செய்யும் முயற்சிக்கு உள்நாட்டிலும் பன்னாட்டு அளவிலும் எதிர்ப்பு எழுந்து வருகின்ற நிலையில், இராமசாமி இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் வாழும் தமிழர்கள் பெரும்பான்மை சிங்களர்களின் இன ஆதிக்கத்திற்கு ஆளாகி, 1லட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்வுதற்கும் தனி அதிகாரத்தை பெறுவதற்கும் ஐநா சார்பில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஜசெக முன்னணி தலைவர்களில் ஒருவருமான ராமசாமி தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles